தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

 

matara

இலங்கை மத்திய வங்கியின் பூர்வாங்க பிரதேச அலுவலகமான மாத்தறைப் பிரதேச அலுவலகமானது உரிய பிராந்தியங்களில் உற்பத்தித்திறன்மிக்க வளங்களின் அபிவிருத்தியை ஊக்குவித்து மேம்படுத்தும் நோக்குடன் 1981 மார்ச்சு 29 அன்று மாத்தறையில் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது. மேலும், அடிமட்ட மக்களின் வங்கித்தொழில் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு கிராமிய பிரதேசங்களில் ஆழமாக ஊடுறுவுவதற்கு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளை இலங்கை மத்திய வங்கி ஆரம்பத்தில் ஊக்குவித்தது. பிரதேச அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் உடனடியாக பிரதேச அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் பிரதான நடவடிக்கைகளிலொன்று யாதெனில் இளைஞர் மற்றும் கிராமம் தேர்ந்தெடுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தை இலக்குவைத்து சுய-தொழில் திட்டத்தின் நடைமுறைப்படுத்தலாகவிருந்தது.

அது தொடக்கப்பட்டதிலிருந்து, பிரதேச அலுவலகம் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் நிலைபெறத்தக்கதும் சமநிலையானதுமான பிரதேச அபிவிருத்தியை அடைவதற்கு பங்களிப்புச் செய்த அதேவேளை தொழில்முயற்சியாளர்களின் நன்மைகளுக்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள், வர்த்தக சந்தைகள், தொழில்நுட்ப பரிமாற்றல்கள் மற்றும் வேறு பிரதேசங்களின் அபிவிருத்தியைக் காண்பதற்கான விஜயங்கள் என்பவற்றை நடாத்தியது.

ஆரம்பத்தில், மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்கள் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இருந்தன. ஆனால் நடாத்தப்பட்ட தொழிற்பாடுகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் குறிக்கோளுடன் பிரதேச அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்ட புவியியல் பிரதேசமானது காலத்திற்கு காலம் பல்வேறு வழிகளில் கொத்தணிகளாக்கப்பட்டன. தற்போது, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் மேற்பார்வைசெய்யப்படுகின்றன.

தொடங்கப்பட்டதன் பின்னர் உடனடியாக, மாத்தறைப் பிரதேச அலுவலகம் தொழிற்பாடுகள் தன்னியக்கமாக்கப்படும் வரை பிரதேச ரீதீயான தீர்ப்பனவு நிலையமொன்றாகத் தொழிற்பட்டதுடன் தொழிற்பாட்டை வர்த்தக வங்கிகள் பொறுப்பேற்கும் வரை 1999இலிருந்து நாணயத் தொழிற்பாடுகள் கையாண்டது. அதற்கு மேலதிகமாக, மத்திய வங்கிப் பணிகளை பிரதேச மட்டத்தில் வழங்குவதில் மாத்தறை பிரதேச அலுவலகம் முக்கிய வகிபாகத்தை வகித்தது. முக்கியமாக, இலங்கை நாணயத்தின் செழிப்பான வரலாற்றையும் பரிணாம வளர்ச்சியையும் எடுத்துகாட்டுகின்ற நாணய அரும்பொருட்;காட்சிச்சாலையை பேணுவதற்கு மாத்தறை பிரதேச அலுவலகம் பொறுப்புடையதாகும். இவ்வரும்பொருட்;காட்சிச்சாலை, 2010ஆம் ஆண்டில் திறந்துவைக்கபட்டதுடன் பல ஆண்டுகளாக இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட பல்வேறு வகையான தாள்களையும் குற்றிகளையும் எண்பிப்பதற்கு பார்வையாளர்களை அனுமதிக்கின்றது.



எதிர்வரும் நிகழ்வுகள்

இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி (CBSL) என்பது இலங்கையின் நிதித்துறையின் உச்ச நிறுவனமாகும். இது 1950 இல் நாணயச் சட்ட சட்டம் எண் 58 , 1949 (MLA) இன் கீழ் ஒரு அரை தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது, மற்றும் நாணய வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
  •  
  •  
  •  

எங்களை தொடர்பு கொள்ள

 
பிரதேச அபிவிருத்தித் திணைக்களம்
தபால் பெட்டி இல. 590
தபால் பெட்டி இல. 590
இலங்கை