தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

 

kili

முப்பது வருட இனரீதியான முரண்பாட்டிற்கு பின்னர் வடக்கு மாகாணத்தில் பொருளாதார நடவடிக்கைகளுக்கான ஆதரவினை வழங்கும் நோக்குடன் யாழ்ப்பாணத்தில் புதிய பிரதேச அலுவலகம் 2010 இல் தாபிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியில் பிரதேச அலுவலகத்தை தாபிக்கும் பரந்த நோக்குடன் இசைந்து செல்லும் விதத்தில் பிரதேச அலுவலகமானது யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் பிராந்திய ஏற்றத்தாழ்வைக் குறைப்பதில் தொடர்ந்தும் அதன் பங்களிப்பை வழங்கியது. 2015 இன் மேயில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கும் விதத்தில் அறிவியல் நகர், கிளிநொச்சியில் மற்றுமொரு பிரதேச அலுவலகம் திறக்கப்பட்டது.

கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தில் கிடைக்கத்தக்க வளங்களையும் வசதிகளையும் பயன்படுத்துவதன் மூலம் பிரதேசத்திலுள்ள மக்களுக்கு காத்திரமான பணிகளை வழங்கும் பொருட்டு யாழ்ப்பாணப் பிரதேச அலுவலகம் கிளிநொச்சி பிரதேச அலுவலகத்துடன் 2017 இல் ஒருங்கிணைக்கப்பட்டது. இவ்வொருங்கிணைப்பின் மூலம் வடக்கு மாகாணத்தின் அனைத்து 05 மாவட்டங்களும் கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் வகைப்படுத்தப்பட்டன. கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தின் குறுங்கால வரலாற்றில் கூட கிளிநொச்சி பிரதேச அலுவலகமானது விழிப்புணர்வு, திறன் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்; உள்ளடங்கலாக பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் ஏனைய பிரதேச அலுவலகங்களைப் போன்று வழமையான மத்திய வங்கி தொழிற்பாடுகளை வழங்குகின்றது.



எதிர்வரும் நிகழ்வுகள்

இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி (CBSL) என்பது இலங்கையின் நிதித்துறையின் உச்ச நிறுவனமாகும். இது 1950 இல் நாணயச் சட்ட சட்டம் எண் 58 , 1949 (MLA) இன் கீழ் ஒரு அரை தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது, மற்றும் நாணய வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
  •  
  •  
  •  

எங்களை தொடர்பு கொள்ள

 
பிரதேச அபிவிருத்தித் திணைக்களம்
தபால் பெட்டி இல. 590
தபால் பெட்டி இல. 590
இலங்கை