தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

 

trin

பல தசாப்த காலமாக ஏற்பட்ட முரண்பாடு முடிவுற்றமையைத் தொடர்ந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான தேவைப்பாட்டிற்கான ஆதரவினை வழங்கும் நோக்குடன்; நான்காவது பிரதேச அலுவலகமாக புதிய பிரதேச அலுவலகம் 2010 ஆம் ஆண்டு திருகோணமலையில் தாபிக்கப்பட்டது. ஆரம்பத்திலிருந்து, திருகோணமலையின் பிரதேச அலுவலகம் கொடுகடன் வழங்கல் பொறிமுறையை வலுப்படுத்தல், விழிப்புணர்வை வழங்குதல், அத்துடன் தசாப்தங்களுக்கு பின்னர் அடிமட்ட மக்கள் தமது வாழ்வை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு தேவைப்படுகின்ற அவசியமான திறன்களையும் அறிவையும் வழங்குதல் என்பவற்றினூடாக பிரதேச மட்டத்தில் சமநிலையான பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கு உற்பத்திதிறன்வாய்ந்த துறைகளுக்கான ஆதரவினை வழங்குவதில் முனைப்பாக ஈடுபட்டது. மேலும், மாகாணத்திலுள்ள தொடர்பான அரசாங்க நிறுவனத்துடன் இணைந்து பிரதேச அலுவலகமானது பிரதேசம் குறித்த விடயங்கள் தொடர்பில் கொள்கைத் தீர்மானங்கள் உருவாக்குதலை நோக்கி தொடர்ந்தும் தமது பணிகளை மேற்கொள்கின்றது. அது தொடங்கப்பட்டதிலிருந்து ஒட்டுமொத்த கிழக்கு

மாகாணமும் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ்; காணப்பட்டதுடன் அதற்கமைய திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் பிரதேச அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டன. பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் புறம்பாக, ஊழியர் சேமலாப நிதிய விடயங்களைக் கையாழுதல், கணக்கெடுப்புக்களை நடாத்துவதற்கு ஆதரவளித்தல், இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளையும் ஞாபகார்த்தக் குற்றிகளையும் விற்பனை செய்தல் அத்துடன் ஏனைய தொழிற்பாடுகளை வழங்குதல் என்பவற்றினூடாக இலங்கை மத்திய வங்கியின் தொழிற்பாடுகளை பிரதேச மட்டத்தில் வழங்கும் விதத்திலும் பிரதேச அலுவலகம் ஈடுபட்டது.



எதிர்வரும் நிகழ்வுகள்

இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி (CBSL) என்பது இலங்கையின் நிதித்துறையின் உச்ச நிறுவனமாகும். இது 1950 இல் நாணயச் சட்ட சட்டம் எண் 58 , 1949 (MLA) இன் கீழ் ஒரு அரை தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது, மற்றும் நாணய வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
  •  
  •  
  •  

எங்களை தொடர்பு கொள்ள

 
பிரதேச அபிவிருத்தித் திணைக்களம்
தபால் பெட்டி இல. 590
தபால் பெட்டி இல. 590
இலங்கை