தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

 

nuwaraeliya

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் பிரதேச ரீதியான அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கும் உரிய மாவட்டங்களில் கொடுகடன் வழங்கல் பொறிமுறையை ஊக்குவிப்பதற்கும் இலங்கை மத்திய வங்கி நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச அலுவலகமொன்றை 2016 சனவரில் தாபித்தது. நுவரெலியா மாவட்டத்தை அமைவிடமாக தெரிவு செய்தமையின் முக்கியதொரு குறிக்கோள் யாதெனில் இரு மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்டத்துறையில் பணிபுரியும் ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு சிறப்பானதும் விரைவானதுமான பணியொன்றை வழங்குவதாகும்.

நுவரெலியாவில் பிரதேச அலுவலகத்தை தாபித்தமைக்கான இலக்குகளை நிறைவுசெய்யும் விதத்தில், மீதிக்கூற்றுக்களை வழங்குதல். பெயர் மற்றும் கணக்கு திருத்தங்கள் மற்றும் ஏனைய விசாரணைகள் என்பவை உள்ளிட்ட 20,000இற்கும் மேற்பட்ட ஊழியர் சேமலாப நிதிய விசாரணைகளை மேற்கொள்ளும் விதத்தில் நுவரெலியா பிரதேச அலுவலகம் பணியாற்றியது. மேலும் தொடங்கப்பட்டதிலிருந்து, நுவரெலியா பிரதேச அலுவலகம் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் நிலைபெறத்தக்கதும் சமநிலையானதுமான பிரதேச அபிவிருத்தியை அடைவதற்கு பங்களிப்புச் செய்த அதேவேளை தொழில்முயற்சியாளர்களின் நன்மைகளுக்கான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களையும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களையும் நடாத்துவதுடன் வர்த்தக சந்தைகள், தொழில்நுட்ப மாற்றல்கள் செயலமர்வுகள் மற்றும் வேறு பிரதேசங்களின் அபிவிருத்தியைக் காண்பதற்கான விஜயங்கள் என்பவற்றை ஏற்பாடுசெய்தது. பிரதேசத்தில் வளம்பெறக்கூடிய துறைகளை அபிவிருத்தி செய்வதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மத்திய வங்கித்தொழில் தொழிற்பாட்டின் கீழ், நுவரெலியா பிரதேச அலுவலகமானது இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளையும் ஞபகார்த்தக் குற்றிகளையும விற்பனை செய்வதிலும் ஈடுபட்டு பிரதேச மட்டத்தில் ஒருங்குசெய்யப்பட்ட அளவீடுகளை நடாத்துகின்றது.



எதிர்வரும் நிகழ்வுகள்

இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி (CBSL) என்பது இலங்கையின் நிதித்துறையின் உச்ச நிறுவனமாகும். இது 1950 இல் நாணயச் சட்ட சட்டம் எண் 58 , 1949 (MLA) இன் கீழ் ஒரு அரை தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது, மற்றும் நாணய வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
  •  
  •  
  •  

எங்களை தொடர்பு கொள்ள

 
பிரதேச அபிவிருத்தித் திணைக்களம்
தபால் பெட்டி இல. 590
தபால் பெட்டி இல. 590
இலங்கை