இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களமானது ஆசியான் கொடுகடன் துணைநிரப்பு நிறுவனக் கூட்டமைப்பு, நிதியியல் வசதிக்குட்படுத்தலுக்கான அணி, ஆசிய பசுபிக் கிராமிய மற்றும் வேளாண்மை கொடுகடன் அமைப்பு போன்ற பன்னாட்டு அமைப்புக்களுக்கான பிரதான மையமாகப் பணியாற்றுகின்றது.
ACSIC ஆசியான் கொடுகடன் துணைநிரப்பு நிறுவனக் கூட்டமைப்பு ஆசிய பிராந்தியத்தில் சிறிய வியாபாரங்களுக்கான கொடுகடன் துணைநிரப்பு முறைமையின் ஆற்றல் வாய்ந்த அபிவிருத்தியை மேம்படுத்தும் குறிக்கோளுடன் சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சிகளுக்கான மிகப் பாரிய கூட்டுறவுச் சபையாக 1987இல் நிறுவப்பட்டது. தற்பொழுது ஆசியான் கொடுகடன் துணைநிரப்பு நிறுவனக் கூட்டமைப்பு 12 நாடுகளை உள்ளடக்கிய 17 உறுப்பு நிறுவனங்களை கொண்டுள்ளது. ஆசியான் கொடுகடன் துணைநிரப்பு நிறுவனக் கூட்டமைப்புடனான உறுப்புரிமை, வருடாந்த மாநாட்டிலும் வருடாந்த பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்திலும் பங்கேற்பதற்கு மத்திய வங்கியை இயலுமைப்படுத்தியது. ஆசியான் கொடுகடன் துணைநிரப்பு நிறுவனக் கூட்டமைப்பின் வருடாந்த மாநாடும் வருடாந்த பயிற்சி நிகழ்ச்சித்திட்டமும் கொடுகடன் உத்தரவாத முறைமைகளின் அனுபவங்களையும் ஆசியான் கொடுகடன் துணைநிரப்பு நிறுவனக் கூட்டமைப்பின் அங்கத்தவர்களிடையேயான புதிய அபிவிருத்திகளையும் பகிர்ந்து கொள்வதற்கான தளமொன்றினை வழங்கின.
AFI நிதியியல் வசதிக்குட்படுத்தலுக்கான அணி என்பது உலகளாவிய கூட்டு அமைப்பொன்றாகவிளங்குவதுடன் நாட்டிலும், பிராந்தியத்திலும் பன்னாட்டு மட்டங்களிலும் நிதியியல் வசதிக்குட்படுத்தலை மேம்படுத்தும் பொதுவான குறிக்கோளுடன் மத்திய வங்கிகளினதும் நிதியியல் ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்களினதும் உறுப்பினர்களினால் வழிநடத்தப்படுகின்றது. நிதியியல் வசதிக்குட்படுத்தலை மேம்படுத்துவதனை இலக்காகக்கொண்ட தாக்கம் மிக்க கொள்கை மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு வசதியளிக்கின்ற விதத்தில் பெரும்பாலும் 90 தோற்றம்பெற்றுவரும் மற்றும் வளர்ச்சியடைந்து வருகின்ற நாடுகளிலிருந்தான ஒழுங்குமுறைப்படுத்துநர்கள், பன்னாட்டு அமைப்புக்கள் மற்றும் தனியார் துறைத் தலைவர்களுடன் பங்கேற்றனர். மத்திய வங்கி இலங்கையில் நிதியியல் வசதிக்குட்படுத்தல் முயற்சிகளை மேம்படுத்துவதற்கு பெற்றுக்கொள்ளப்படக்கூடிய நன்மைகளை பரிசீலனையில் கொண்டு நிதியியல் வசதிக்குட்படுத்தலுக்கான அணியின் உறுப்புரிமையினை 2010 யூனில் பெற்றுக்கொண்டது.
மத்திய வங்கி நிதியியல் வசதிக்குட்படுத்தலுக்கான அணி பங்கேற்கின்ற தொழிற்படுகின்ற குழுக்களினால் ஒழுங்கு செய்யப்படும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதுடன் மாயா கடப்பாட்டு பிரகடனத்தின் மூலமாக நிதியியல் வசதிக்குட்படுத்தலுக்கான அணியின் உலகளாவிய குரல் தளத்திற்கும் சந்தா வழங்கிவருகிறது.
APRACA கிராமிய நிதியின் வினைத்திறனை மற்றும் காத்திரமான தன்மையினை மேம்படுத்துவதனூடாக ஆசிய பசுபிக் பிராந்தியத்திலுள்ள வறிய கிராமிய மக்களின் உற்பத்தித்திறன் அனைத்தையுமுள்ளடக்கிய வளர்ச்சி, சுயமாக தங்கியிருக்கும் தன்மை மற்றும் நலன்புரி என்பனவற்றை மேம்படுத்தும் முக்கிய குறிக்கோளுடனும் அறிவினை பகிர்ந்துகொள்ளுதல், இயலாற்றலைக் கட்டியெழுப்புதல், ஆராய்ச்சி மற்றும் நிபுணத்துவப் பரிமாற்றம் என்பனவற்றின் வலையமைப்பொன்றினூடாக நிதியியல் பணிகளை அணுகுவதனை மேம்படுத்தும் குறிக்கோளுடனும் கிராமிய மற்றும் வேளாண்மை கொடுகடனுக்கான மிகப்பாரிய ஆசியான் அமைப்பொன்றாக 1977இல் நிறுவப்பட்டது.