தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

 

matale

1985.12.23 அன்று மாத்தளையில் 3ஆவது பிரதேச அலுவலகம் தாபிக்கப்பட்டதால் 1985ஆம் ஆண்டு என்பது பிரதேச ரீதியான அபிவிருத்தியின் நியதிகளில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க ஆண்டாக காணப்பட்டதுடன் மாத்தளை, கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்கள் மாத்தளைப் பிரதேச அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டன. வர்த்தக வங்கிகள் கிராமிய பிரதேசங்களின் அதன் நடவடிக்கைகளை ஊக்குவித்தல் மற்றும் வங்கிக் கடன்வழங்கலுடன் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல் ஆகிய நோக்குடன் மாத்தளை பிரதேச அலுவலகம் ஆரம்பித்துவைக்கப்பட்ட ஆண்டில் “சுயதொழில் மற்றும் கிராமம் தேர்ந்தெடுத்தல் திட்டம்” எனும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியது. முக்கியமாக, ‘புதிய அனைத்தையுமுள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டத்தை” விளக்குவதற்கு கருத்தரங்குத் தொடர்களை நடாத்துவதற்காக பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்வதில் மாத்தளைப் பிரதேச அலுவலகம் ஈடுபட்டது.

தொடங்கப்பட்டதிலிருந்து மாத்தளை பிரதேச அலுவலகம் கிராமிய மற்றும் மீள்நிதி கொடுகடன் தொழிற்பாடுகளை தாபிப்பதுடன் தொடர்புடைய பல்வேறு நடவடிக்கைகளிலும்; முனைப்பாக ஈடுபட்டதுடன் காலப்போக்கில் விழிப்புணர்வு, பயிற்சி மற்றும் திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள், தொழில்நுட்ப மாற்றல் மற்றும் வர்த்தகச் சந்தைகள் ஆகியவற்றை நடாத்துவதன் மூலம் பிரதேச அபிவிருத்தியில் முக்கிய கவனம் செலுத்தியது.

தொழிற்பாடுகள் தன்னியக்கப்படுத்தப்படுவரை மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள இரண்டு பிரதேச ரீதியான தீர்ப்பனவு நிலையங்களை மாத்தளைப் பிரதேச அலுவலகம் தொடர்ந்தும் நடாத்தியது. மத்திய வங்கித் தொழிற்பாட்டின் கீழ், ஆரம்பத்தில் மாத்தளைப் பிரதேச அலுவலகமானது திறைசேரி உண்டியல்களை விற்பனை செய்தல், பிரதேச மட்ட அளவீடுகளை நடாத்துதல், நாணயமாற்று வசதிகள், தரவுச் சேகரிப்புத் தொழிற்பாடுகள், கிராமிய வங்கிக் கிளை பரிசோதனை நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் ஈடுபட்டதுடன் பின்னர் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக ஊழியர் சேமலாப நிதியத்தைக் கையாள்வதில் முக்கிய கவனத்தைச் செலுத்தியது.



எதிர்வரும் நிகழ்வுகள்

இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி (CBSL) என்பது இலங்கையின் நிதித்துறையின் உச்ச நிறுவனமாகும். இது 1950 இல் நாணயச் சட்ட சட்டம் எண் 58 , 1949 (MLA) இன் கீழ் ஒரு அரை தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது, மற்றும் நாணய வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
  •  
  •  
  •  

எங்களை தொடர்பு கொள்ள

 
பிரதேச அபிவிருத்தித் திணைக்களம்
தபால் பெட்டி இல. 590
தபால் பெட்டி இல. 590
இலங்கை