சிறு உடமையாளர் தேயிலை மற்றும் இறப்பர் புத்துயிரளித்தல் செயற்றிட்டத்தின் கீழ் வட்டி உதவுதொகைத் திட்டம்
Company | Contact |
---|---|
நோக்கம் | மீள்பயிரிடப்பட்ட தேயிலை மற்றும் புதிதாகப் பயிரிடப்பட்ட இறப்பர் தோட்டங்களிலிருந்து வருமானத்தினை ஈட்டுவதில் தாமதத்தினை எதிர்நோக்குகின்ற சிறு உடமை வேளாண்மையாளருக்குச் சலுகை ரீதியான நிதியியல் வசதிகளை வழங்குதல் |
நிதியிடல் மூலம் | இலங்கை அரசாங்கம் - வட்டி உதவுதொகை பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்கள் - கடன் நிதியிடல் |
தொழிற்பாட்டுப் பிரதேசம் | சிறு உடமையாளர் தொடர்பான கடன்களின் பொருட்டு காலி, மாத்தறை, இரத்தினபுரி, பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் இறப்பர் சிறு உடமையாளர்களைப் பொறுத்தவரையில் மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் |
பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்கள் | பிரதேச அபிவிருத்தி வங்கி, சணச அபிவிருத்தி வங்கி லிமிடெட், அட்டன் நஷனல் வங்கி பிஎல்சி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, கொமர்ஷல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி |
உயர்ந்தபட்ச கடன் வரையறை மற்றும் காலம் | 3 மாத சலுகைக் காலத்தினை உள்ளடக்கிய 3 ஆண்டுகளுக்காக ரூ.400,000 |
வட்டி வீதம் | 9 சதவீதம் |
இலக்கிடப்பட்ட குழு | பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் ஆலோசனையுடன் செயற்றிட்ட முகாமைத்துவப் பிரிவினால் விதந்துரைக்கப்பட்ட தேயிலை மற்றும் இறப்பர் சிறு உடமை வேளாண்மையாளர்கள். |
இலங்கையில் இறால் பண்ணையினைத் செறிவுபடுத்துவதற்கான வட்டி உதவுதொகைத் திட்டம்
Company | Contact |
---|---|
நோக்கம் | இறால் வளர்ப்போர் தமது பண்ணைகளைத் தரமுயர்த்துவதற்காக உதவிகளை வழங்குதல் |
நிதியிடல் மூலம் | வட்டி உதவுதொகை – மீன் பிடி அமைச்சு கடன் நிதியிடல் - பங்கேற்கின்ற நிதியியல் நிறுவனங்கள் |
தொழிற்பாட்டுப் பிரதேசம் | நாடு முழுவதும் |
பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்கள் | இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி |
உயர்ந்தபட்ச கடன் வரையறை மற்றும் காலம் | 6 மாத சலுகைக் காலம் உட்பட 2 ஆண்டுகளுக்கு இல.ரூ.100 மில்லியன் மற்றும் 6 மாத சலுகைக் காலம் |
வட்டி வீதம் | முதல் 18 மாதங்கள் - 4.5 சதவீதம் அடுத்த 6 மாதங்கள் - 8.5 சதவீதம் |
இலக்கிடப்பட்ட குழு | “ஆ” இறால் வளர்ப்பு தரத்தையும’ “இ” இறால் வளர்ப்பு தரத்தையும் தற்போது கொண்ட இறால் வளர்ப்போர் |