தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

 

தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் திட்டமானது முக்கிய தூண்கள் மற்றும் மரபுரீதியாக வேறுபட்டுள்ளவற்றை இணைக்கின்ற ஆக்க உணர்வுகள் என்பன மீது வியாபிக்கின்ற 26 குறிக்கோள்களின் கீழ் 80 பரந்த நடவடிக்கைகளை உள்ளடக்குகின்ற ஒவ்வொரு நடைமுறைப்படுத்தல் நிறுவனத்திற்குமான வகிபாகங்கள் மற்றும் பொறுப்புக்கள் மீது தெளிவுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

மையப்படுத்தும் துறை குறிக்கோள்கள் நடவடிக்கைகள்
டிஜிட்டல் நிதி மற்றும் கொடுப்பனவுகள் 08 20
கொடுப்பனவுகள், நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி நிதி 02 09
வாடிக்கையாளர் பாதுகாப்பு 04 15
நிதியியல் அறிவினையும் இயலளவினையும் கட்டியெழுப்புதல் 05 19
மரபுரீதியாக வேறுபட்டுள்ளவற்றை இணைக்கின்ற ஆக்க உணர்வு 07 17
மொத்தம் 26 80
தூண் அடிப்படையிலான குறிக்கோள்கள்

டிஜிட்டல் நிதி மற்றும் கொடுப்பனவுகள்

  • நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையின் நிறுவனசார் முகாமைத்துவம்
  • அரசாங்கத் திட்டங்களையும் சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கல்
  • தரப்படுத்தலை உறுதிசெய்வதற்கு உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் செயன்முறையினைச் சீரமைத்தல்
  • இயலச்செய்கின்ற ஒழுங்குமுறைப்படுத்தல் சூழலை உருவாக்குதல்
  • நிதியியல் வசதிக்குட்படுத்தல் மீது விசேட கவனம் செலுத்தி நிதியியல் தொழில்நுட்ப அமைப்பு முறைமையின் அபிவிருத்திக்கு ஆதரவளித்தல்
  • செல்லிட மற்றும் இலத்திரனியல் கொடுப்பனவு வழிமுறைகளை பயன்படுத்துவதை விரிவுபடுத்துவதற்கு அதிக கேள்வியினை உருவாக்குதல்.
  • டிஜிட்டல் கொடுப்பனவுகளின் வழங்கலை அதிகரித்தல்
  • டிஜிட்டல் உட்கட்டமைப்பு அபிவிருத்தியினை வலுப்படுத்தல்

கொடுப்பனவுகள், நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி நிதி

  • பசுமை மற்றும் நிலைபெறத்தக்க நிதி அதேபோன்று பெண்கள், வறியோர் அத்துடன் குறைவான கல்விப் பின்னணியுடன் கூடிய தனிப்பட்டவர்கள் உள்ளடங்கலாக பதிக்கப்படக்கூடிய வகுப்பினர் போன்றன மீது விசேட கவனம் செலுத்தி நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிப்பதற்கும் உயர்தர உற்பத்திகளின் வகையினை விரிவுபடுத்துவதற்கும் முறைசார் நிதியியல் துறையின் இயலளவினைக் கட்டியெழுப்புதல்.
  • அரசாங்கம் துணையளிக்கின்ற நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி நிதி அணுகுமுறைகளையும் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி ஆதரவு நிகழ்ச்சித் திட்டங்களையும் மேம்படுத்தி ஒருங்கிணைத்தல்.

வாடிக்கையாளர் பாதுகாப்பு

  • இலங்கையில் வழங்கப்படும் அனைத்து நிதியியல் சேவைகளையும் உள்ளடக்கி ஒழுங்குமுறைப்படுத்துநர்களுக்கான சட்ட ரீதியான பொறுப்பாணைகளிலுள்ள குறைபாடுகளைத் தீர்த்தல்.
  • அனைத்து வழங்குநர்கள், உற்பத்திகள் மற்றும் சேவைகள் என்பவற்றுக்கிடையில் நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பிற்கான அனைத்தையுமுள்ளடக்கிய சட்ட ரீதியான தேவைப்பாடுகளை உறுதிசெய்தல்.
  • நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு மேற்பார்வையினை மேலும் வலுப்படுத்தல்.
  • அனைத்து நிதியியல் வாடிக்கையாளர்களுக்குமான பிணக்கினைத் தீர்ப்பதற்கு அணுகத்தக்க, வசதியான, சுயாதீனமான, நன்கு வளம் அளிக்கப்பட்ட, நியாயமான, பொறுப்புக்கூறத்தக்க, உரிய காலத்திலான அத்துடன் வினைத்திறன் மிக்க வழிகளை உறுதிசெய்வதற்கு ஏற்கனவே காணப்படுகின்ற நீதிமன்றத்திற்கு வெளியில் பிணக்குகளைத் தீர்த்தல் பொறிமுறைகளை மேம்படுத்தல்.

நிதியியல் அறிவினையும் இயலளவினையும் கட்டியெழுப்புதல்

  • சனத்தொகையின் நிதியியல் அறிவின் மட்டத்தினை மதிப்பிடுதல் மற்றும் முக்கிய இடைவெளிகளை இனங்காணுதல்.
  • நிதியியல் அறிவு முயற்சிகளின் ஒருங்கிணைத்தலை மேம்படுத்தல்.
  • வாடிக்கையாளர் மத்தியில் குறிப்பாக, பெண்கள், வறியோர் மற்றும் குறைவான கல்விப் பின்னணியுடன் கூடிய தனிப்பட்டவர் உள்ளடங்கலாக பாதிக்கப்படக்கூடிய வகுப்பினர் மத்தியில் நிதியியல் அறிவினை அதிகரித்தல்.
  • நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் இயலளவினை அதிகரித்தல்.
  • நிதியியல் அறிவை வழங்குவதற்கான வழிகளின் செயல்திறன் வாய்ந்த தன்மையினையும் வினைத்திறனையும் மேம்படுத்தல்.

தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாய ஆக்க உணர்வுகள்

ஆக்க உணர்வு 1: தரவு

  • தரவு சேகரித்தலுக்காக இசைவான ஒன்றுதிரட்டிய அணுகுமுறையொன்றினை உருவாக்குதல்.

ஆக்க உணர்வு 2: உட்கட்டமைப்பு

  • கொடுகடன் தகவல் முறைமையை மேம்படுத்தல்
  • பிணையளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல் கட்டமைப்பை விசேடமாக அசைகின்றவைக்கான கட்டமைப்பை மேம்படுத்தல்.
  • தொடர்பூட்டல் உட்கட்டமைப்பினை மேம்படுத்தல் (இணையத்தள செயற்பரப்பு மற்றும் திறன்பேசி ஊடுருவல்)
  • தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் நடைமுறைப்படுத்தலுக்கான ஆளுகைக் கட்டமைப்பினைத் தொழிற்படுத்தல்.

ஆக்க உணர்வு 3: கொள்கைக் கருவிகள் அத்துடன் இயலச்செய்கின்ற ஒழுங்குமுறைப்படுத்தல் சூழல்

  • தரவு அந்தரங்கம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றுக்கான சட்டக் கட்டமைப்பினை இறுதிப்படுத்தல்.
  • குறைவாக சேவையளிக்கப்பட்ட பிரதேசங்களில் சேவைகளை விரிவுபடுத்துவதற்கு வழங்குநர்களை மேலும் ஊக்குவித்தல்.
எதிர்வரும் நிகழ்வுகள்

இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி (CBSL) என்பது இலங்கையின் நிதித்துறையின் உச்ச நிறுவனமாகும். இது 1950 இல் நாணயச் சட்ட சட்டம் எண் 58 , 1949 (MLA) இன் கீழ் ஒரு அரை தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது, மற்றும் நாணய வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
  •  
  •  
  •  

எங்களை தொடர்பு கொள்ள

 
பிரதேச அபிவிருத்தித் திணைக்களம்
தபால் பெட்டி இல. 590
தபால் பெட்டி இல. 590
இலங்கை