சௌபாக்யா கடன் திட்டம் (சுபீட்சம்)
*கடன் திட்டம் விரைவில் முடிவடையும் என்பதால் புதிய கடன்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Company | Contact |
---|---|
நோக்கம் | ஏதேனும் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழில்முயற்சிகளை அல்லது அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஏதேனும் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழில்முயற்சிகளைத் தொடங்குவதற்கு அல்லது விரிவுபடுத்துவதற்கானது. |
நிதியிடல் மூலம் | இலங்கை மத்திய வங்கி |
தொழிற்பாட்டு பகுதி | நாடு முழுவதும் |
பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்கள் | இலங்கை வங்கி, மக்கள் வங்கி, ஹட்டன் நே~னல் பாங்க் பிஎல்சி, கொமர்ஷல் பாங்க் ஒப் பிஎல்சி, சம்பத் பாங்க் பிஎல்சி, பிரதேச அபிவிருத்தி வங்கி, சணச டிவலப்மன்ட் பாங்க் லிமிடெட், நேஷனல் டிவலப்மன்ட் பாங்க் பிஎல்சி, நேஷன் டிரஸ்ட் பாங்க் பிஎல்சி, பான் ஏசியன் பாங்கிங் கோபரேசன் பிஎல்சி, யூனியன் பாங்க் ஒப் கொழும்பு பிஎல்சி, டிவ்சிசி பாங்க் பிஎல்சி, இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி, கார்கில்ஸ் பாங்க் லிமிடெட், சிறிலங்கா சேவிங்ஸ் பாங்க் லிமிடெட், அரச ஈட்டு முதலீட்டு வங்கி |
உயர்ந்தபட்ச கடன் எல்லை மற்றும் காலம் | ரூ. 25 மில்லியன், 6 மாதகாலத்துடனான 5 ஆண்டுகால சலுகைக் காலம் |
வட்டி வீதம் | 9% |
நடவடிக்கைகள் நீங்கலாக | காணி, கட்டடவாக்கம், ஊர்திகள், எரிபொருள் மற்றும் திருத்தல் நிலையங்களின் கொள்வனவு மற்றும் பண்டங்களின் வாங்கல் மற்றும் விற்றல். |
சிறுஉடமையாளர் வேளாண்வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம்
Company | Contact |
---|---|
நோக்கம் | வேளாண்மை பொருட்களின் உற்பத்தி, உற்பத்தியாக்கம் மற்றும் தரத்தினை அதிகரித்தலும் பெறுமதியை கூட்டலும் |
நிதியிடல் மூலம் | வேளாண்மை அபிவிருத்தி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கான பன்னாட்டு நிதியம் |
தொழிற்பாட்டு பகுதி | நாடு முழுவதும் |
பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்கள் | இலங்கை வங்கி, மக்கள் வங்கி, ஹட்டன் நெஷனல் வங்கி பிஎல்சி, கொமர்ஷல் பாங்க் ஒப் சிலோன் பிஎல்சி, சம்பத் பாங்க் பிஎல்சி, பிரதேச அபிவிருத்தி வங்கி, டிவ்சிசி பாங்க் பிஎல்சி, கார்கில்ஸ் பாங்க், சணச டிவலப்மன்ட் பாங்க் லிமிடெட் |
சிறுஉடமையாளர் வேளாண்வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம் - வேளாண்வியாபார கடன் திட்டம்
Company | Contact |
---|---|
தகைமையுடைய துணைக் கடன்பாட்டாளர்கள் | 4பி (பொது – தனியார் - உற்பத்தியாளர் - பங்குடமை) ஒழுங்கேற்பாடுகளில் ஈடுபட்டுள்ள வேளாண்மையாளர்கள், வேளாண்மை குழுக்கள், வேளாண்மை அமைப்புக்கள் மற்றும் உற்பத்தியாளர் அமைப்புக்கள் |
தகைமையுடைய நடவடிக்கைகள் | வேளாண்மையாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஏதேனும் வேளாண்வியாபார நடவடிக்கை, வேளாண்மை குழுக்கள் சிறுஉடமையாளர் வேளாண்வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டத்தின் 4பி ஒழுங்கேற்பாட்டில் ஈடுபட்டுள்ள வேளாண்மையாளர் அமைப்புக்கள் மற்றும் உற்பத்தியாளர் அமைப்புக்கள் |
உயர்ந்தபட்ச கடன் எல்லை | ரூ.500,000 |
வட்டி | துணைக் கடன்பட்டாளருக்கு ஆண்டிற்கு 6.5 சதவீதம் பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களுக்கு – ஆண்டிற்கு 3 சதவீதம் |
உயர்ந்தபட்ச சலுகைக்காலம் | ஒரே தடவையிலான மீள்கொடுப்பனவு: 18 மாதங்கள் மாதாந்த மீள்கொடுப்பனவு: 12 மாதங்கள் |
உயர்ந்தபட்ச மீள்கொடுப்பனவு | ஒரே தடவையிலான மீள்கொள்வனவு: 18 மாதங்கள் மாதாந்த மீள்கொடுப்பனவு : 36 மாதங்கள் |
காலம் (சலுகைக் காலம் உட்பட) | வோளாண்மையாளர் அமைப்புக்கள்/ உற்பத்தியாளர் அமைப்புக்கள் மற்றும் வேளாண்மையாளர் குழுக்களை பொறுத்தவரையில் சலுகைக் காலம் உட்பட 60 மாதங்கள் |
சிறுஉடமையாளர் வேளாண்வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம் - இளையோர் கடன் திட்டம்
Company | Contact |
---|---|
தகைமையுடைய துணைக் கடன்பாட்டாளர்கள் | ஏதேனும் வேளாண்மை பெறுமதி சங்கலியுடன் இணைக்கப்பட்டுள்ள மற்றும் 18 – 40 வயதுக்குட்பட்ட இளையோர் தொழில்முயற்சியாண்மையாளர்கள் அத்துடன்/ அல்லது இளையோர் தொழில்முயற்சியாண்மையாளர் குழு |
தகைமையுடைய நடவடிக்கைகள் | ஏதேனும் வேளாண்மை பெறுமதி சங்கிலியுடன் இணைக்கப்பட்டுள்ள இளையோரினால் முன்னெடுக்கப்படும் தொழில்முயற்சியாண்மை நடவடிக்கைகள் |
உயர்ந்தபட்ச கடன் எல்லை | ரூ. 2 மில்லியன் |
வட்டி | துணைக் கடன்பட்டாளருக்கு ஆண்டிற்கு 6.5 சதவீதம் பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களுக்கு – ஆண்டிற்கு 3 சதவீதம் |
உயர்ந்தபட்ச சலுகைக்காலம் | செயற்றிட்டத்தின் தேவைப்பாட்டினைப் பொறுத்து மாதாந்த மீள்கொடுப்பனவுகளுக்காக 12 மாதங்கள் |
உயர்ந்தபட்ச மீள்கொடுப்பனவு காலம் (சலுகைக் காலம் உட்பட) | 60 மாதங்கள் |
சிறு உடமையாளர் வேளாண் வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம் - வருமான உருவாக்கல் கடன் திட்டம்
Company | Contact |
---|---|
தகைமையுடைய துணைக் கடன்பாட்டாளர்கள் | வேளாண்மை, மீன்பிடி மற்றும் விலங்கு வளர்ப்புத் துறைகளிலுள்ள வருமான உருவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தனிப்பட்டவர்கள் |
தகைமையுடைய நடவடிக்கைகள் | வேளாண்மை, மீன்பிடி மற்றும் விலங்கு வளர்ப்புத் துறைகளிலுள்ள நடவடிக்கைகள் |
உயர்ந்தபட்ச கடன் எல்லை | ரூ.300,000 |
வட்டி | துணைக் கடன்பாட்டாளர்களுக்கு ஆண்டிற்கு 6.5 சதவீதம் பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களுக்கு – ஆண்டிற்கு 3 சதவீதம் |
உயர்ந்தபட்ச சலுகைக்காலம் | செயற்றிட்டத்தின் தேவைப்பாடுகளைப் பொறுத்து மாதாந்த மீள்கொடுப்பனவுகளுக்கான காலம் 12 மாதங்கள் |
உயர்ந்தபட்ச மீள்கொடுப்பனவு காலம் (சலுகைக் காலம் உட்பட) | 36 மாதங்கள் |
சிறு உடமையாளர் வேளாண் வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம் - ஊக்குவிப்பாளர் கடன் திட்டம்
Company | Contact |
---|---|
தகைமையுடைய துணைக் கடன்பாட்டாளர்கள் | சிறுஉடமையாளர் வேளாண் வியாபார பங்குடமை நிகழச்சித்திட்டத்தின் 4பி ஒழுங்கேற்பாடுடன் உத்தியோகப்பூர்வமாக இணைந்துகொண்ட ஊக்குவிப்பாளர்கள் |
தகைமையுடைய நடவடிக்கைகள் | சிறுஉடமையாளர் வேளாண் வியாபார பங்குடமை நிகழச்சித்திட்டத்தின் 4பி ஒழுங்கேற்பாடுடன் உத்தியோகப்பூர்வமாக இணைந்துகொண்ட ஊக்குவிப்பாளர்களின் வேளாண்வியாபார பெறுமதி சங்கிலி அபிவிருத்தியுடன் தொடர்புடைய வியாபார நடவடிக்கைகள் |
உயர்ந்தபட்ச கடன் எல்லை | ரூ.18,000,000 அல்லது ஐ.அ.டொ 100000 ரூபாய்க்கு நிகரானது |
வட்டி | துணைக் கடன்பாட்டாளர்களுக்கு ஆண்டிற்கு 6.5 சதவீதம் பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களுக்கு – ஆண்டிற்கு 3 சதவீதம் |
உயர்ந்தபட்ச சலுகைக்காலம் | 12 மாதங்கள் |
உயர்ந்தபட்ச மீள்கொடுப்பனவு காலம் (சலுகைக் காலம் உட்பட) | 60 மாதங்கள் |
சிறு உடமையாளர் வேளாண் வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டம் - ஊக்குவிப்பாளர் மொத்த கடன் திட்டம்
Company | Contact |
---|---|
தகைமையுடைய துணைக் கடன்பாட்டாளர்கள் | சிறுஉடமையாளர் வேளாண்வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டத்தின் சிறுஉடமையாளர்களுக்கு கடன்வழங்குவதற்கான 4பி ஒழுங்கேற்பாடுடன் இணைந்துகொண்ட 4பி ஊக்குவிப்பாளர்கள் |
தகைமையுடைய நடவடிக்கைகள் | சிறுஉடமையாளர் வேளாண் வியாபார பங்குடமை நிகழச்சித்திட்டத்தின் 4பி ஒழுங்கேற்பாடுடன் உத்தியோகப்பூர்வமாக இணைந்துகொண்ட ஊக்குவிப்பாளர்களின் வேளாண்வியாபார பெறுமதி சங்கிலி அபிவிருத்தியுடன் தொடர்புடைய வியாபார நடவடிக்கைகள் |
உயர்ந்தபட்ச கடன் எல்லை | 4பி செயற்றிட்ட முதலீட்டு திட்டத்தில் குறித்துரைக்கப்பட்டவாறு கடன் தொகை தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதுடன் சிறுஉடமையாளர் வேளாண்வியாபார பங்குடைமை நிகழ்ச்சித்திட்டத்தின் சொத்து முகாமைத்துவப் பிரிவு மற்றும் சொத்து முகாமைத்துவப் பிரிவின் வழிகாட்டல்கள் மற்றும் விடயத்திற்கு விடயம் அடிப்படையில் தேசிய வழிநடாத்தல் குழுவின் அனுமதிக்குட்பட்டு தொடர்புடைய பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களினால் மதிப்பீடு முன்னெடுக்கப்படும் |
வட்டி | ஆண்டிற்கு 6.5 சதவீத துணைக் கடன்பாட்டாளருக்கு ஆண்டிற்கு 3 சதவீத பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களுக்கு |
உயர்ந்தபட்ச சலுகைக்காலம் | ஒரேதடவையிலான மீள்கொடுப்பனவு: 18 மாதங்கள் மாதாந்த மீள்கொடுப்பனவு: 12 மாதங்கள் |
உயர்ந்தபட்ச மீள்கொடுப்பனவு காலம் (சலுகைக் காலம் உட்பட) | ஒரேதடவையிலான மீள்கொடுப்பனவு: 18 மாதங்கள் மாதாந்த மீள்கொடுப்பனவு: 36 மாதங்கள் |
வேளாண்வியாபார பங்குடைமை நிகழ்ச்சித்திட்டம் - நிதியியல் இடையீட்டாளர்கள் மொத்தக் கடன் திட்டம்
Company | Contact |
---|---|
தகைமையுடைய துணைக் கடன்பாட்டாளர்கள் | நிதியியல் இடையீட்டாளர் சிறுஉடமையாளர் வேளாண்வியாபார பங்குடைமை நிகழ்ச்சித்திட்டத்தின் கடன்வழங்கலுக்கு |
தகைமையுடைய நடவடிக்கைகள் | சிறுஉடமையாளர் வேளாண்வியாபார பங்குடைமை நிகழ்ச்சித்திட்டத்தின் தேசிய வழிநடாத்தல் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கிராமம் அடிப்படையிலான வேளாண்மையாளர் வலையமைப்புடன் நிதியியல் இடையீட்டை அடிப்படையாகக் கொண்ட சமூகம் |
உயர்ந்தபட்ச கடன் எல்லை | 4பி செயற்றிட்ட முதலீட்டு திட்டத்தில் குறித்துரைக்கப்பட்டவாறு கடன் தொகை தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதுடன் சிறுஉடமையாளர் வேளாண்வியாபார பங்குடைமை நிகழ்ச்சித்திட்டத்தின் சொத்து முகாமைத்துவப் பிரிவு மற்றும் சொத்து முகாமைத்துவப் பிரிவின் வழிகாட்டல்கள் மற்றும் விடயத்திற்கு விடயம் அடிப்படையில் தேசிய வழிநடாத்தல் குழுவின் அனுமதிக்குட்பட்டு தொடர்புடைய பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களினால் மதிப்பீடு முன்னெடுக்கப்படும் |
வட்டி | ஆண்டிற்கு 6.5 சதவீத துணைக் கடன்பாட்டாளருக்கு ஆண்டிற்கு 3.75 சதவீத துணைக் கடன்பாட்டாளருக்கு (நிதியியல் இடையீட்டாளர்) ஆண்டிற்கு 2.25 சதவீத பங்கேற்பாளர் நிதியியல் நிறுவனங்களுக்கு |
உயர்ந்தபட்ச சலுகைக்காலம் | ஒரேதடவையிலான மீள்கொடுப்பனவு: 18 மாதங்கள் மாதாந்த மீள்கொடுப்பனவு: 12 மாதங்கள் |
உயர்ந்தபட்ச மீள்கொடுப்பனவு காலம் (சலுகைக் காலம் உட்பட) | ஒரேதடவையிலான மீள்கொடுப்பனவு: 18 மாதங்கள் மாதாந்த மீள்கொடுப்பனவு: 36 மாதங்கள் |
சிறுஉடமையாளர் வேளாண்வியாபார பங்குடைமை நிகழ்ச்சித்திட்டம் - தேயிலை மற்றும் இறப்பர் துறை கடன் திட்டம்
Company | Contact |
---|---|
தகைமையுடைய துணைக் கடன்பாட்டாளர்கள் | சிறுஉடமையாளர் வேளாண்வியாபார பங்குடைமை நிகழ்ச்சித்திட்டத்தின் தேயிலை மற்றும் இறப்பர் துறை பெறுமதி சங்கலி பங்கேற்பாளர்கள் |
தகைமையுடைய நடவடிக்கைகள் | உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் அல்லது சிறுஉடமையாளர்களின் சார்பில் உபகரணத்தை கொள்வனவு செய்தல், அல்லது பருவகால கடன்களை வழங்குதல் |
உயர்ந்தபட்ச கடன் எல்லை | சிறுஉடமையாளர் வேளாண்வியாபார பங்குடைமை நிகழ்ச்சித்திட்டத்தின் சொத்து முகாமைத்துவப் பிரிவு மற்றும் சொத்து முகாமைத்துவப் பிரிவின் வழிகாட்டல்கள் மற்றும் விடயத்திற்கு விடயம் அடிப்படையில் தேசிய வழிநடாத்தல் குழுவின் அனுமதிக்குட்பட்டு தொடர்புடைய பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களினால் கடன் தொகை தீர்மானிக்கப்பட வேண்டும். |
வட்டி | ஆண்டிற்கு 6.5 சதவீத துணைக் கடன்பாட்டாளருக்கு ஆண்டிற்கு 3 சதவீத பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களுக்கு |
உயர்ந்தபட்ச சலுகைக்காலம் | ஒரேதடவையிலான மீள்கொடுப்பனவு: 18 மாதங்கள் மாதாந்த மீள்கொடுப்பனவு: 12 மாதங்கள் |
உயர்ந்தபட்ச மீள்கொடுப்பனவு காலம் (சலுகைக் காலம் உட்பட) | ஒரேதடவையிலான மீள்கொடுப்பனவு: 18 மாதங்கள் மாதாந்த மீள்கொடுப்பனவு: 60 மாதங்கள் |
வறுமை ஒழிப்பு நுண்பாக நிதிச் செயற்றிட்ட சுழலும் நிதியம்
Company | Contact |
---|---|
நோக்கம் | வருமான உருவாக்க நடவடிக்கைகளை ஊக்குவிப்பதனூடாகவும் மற்றும் முறைசார்ந்த வங்கித்தொழில் முறைமையுடன் குறைந்த வருமான குழுக்களை இணைப்பதற்கு ஒழுங்குகளைச் செய்வதன் மூலமும் வறுமையை ஒழித்தல் |
நிதியிடல் மூலம் | இலங்கை மத்திய வங்கி |
தொழிற்பாட்டுப் பிரதேசம் | கொழும்பு, களுத்துறை, கம்பகா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தளை, அம்பாந்தோட்டை, கேகாலை, குருநாகல் |
பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்கள் | மக்கள் வங்கி, இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, சணச அபிவிருத்தி வங்கி லிமிடெட் |
உயர்ந்தபட்ச கடன் வரையறை மற்றும் காலம் | 3 ஆண்டுகளுக்கு ரூ.50,000 (சலுகைக் காலம் இல்லை) |
வட்டி வீதம் | 12 சதவீதம் |
இலக்கிடப்பட்ட குழு | மாதாந்த வருமானம் ரூ.7,500 இற்கும் குறைவான தொகையினைப் பெறும் வீட்டுத்துறையினர் |
சுயதொழில் ஊக்குவிப்பு முன்னெடுப்புக் கடன் திட்டம் கட்டம் II
Company | Contact |
---|---|
நோக்கம் | அங்கீகரிக்கப்பட்ட தொழில்முயற்சி நிறுவனங்களினால் பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்கள் சொந்தமாகவே சுயவேலைவாய்ப்புச் செயற்றிட்டங்களை நிறுவுவதற்காக நிதியியல் உதவிகளை வழங்குதல். |
நிதியிடல் மூலம் | இலங்கை அரசாங்கம் |
தொழிற்பாட்டுப் பிரதேசம் | நாடு முழுவதும் |
பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்கள் | இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, அட்டன் நஷனல் வங்கி பிஎல்சி, கொமர்ஷல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி, சம்பத் வங்கி பிஎல்சி, சணச அபிவிருத்தி வங்கி லிமிடெட், இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி |
உயர்ந்தபட்ச கடன் வரையறை மற்றும் காலம் | 6 மாத சலுகைக் காலம் உட்பட 5 ஆண்டு காலப்பகுதிக்கு ரூ.1,000,000 |
வட்டி வீதம் | 7 சதவீதம் |
இலக்கிடப்பட்ட குழு | அங்கீகரிக்கப்பட்ட தொழில்பயிற்சி நிறுவனங்களினால் பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்கள் |
உள்நாட்டு வேளாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - முன்னோடிக் கட்டம்
*New Loans are not accepted since the loan scheme to be concluded shortly.
Company | Contact |
---|---|
நோக்கம் | உள்நாட்டு வேளாண்மைத் துறையினை அபிவிருத்தி செய்தல் மற்றும் வேளாண்மை ஏற்றுமதிகளையும் இறப்பர் செய்கையினையும் ஊக்குவித்தல் |
நிதியிடல் மூலம் | இலங்கை மத்திய வங்கி |
தொழிற்பாட்டுப் பிரதேசம் | நாடு முழுவதும் |
பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்கள் | இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, சணச அபிவிருத்தி வங்கி லிமிடெட், கார்கில்ஸ் வங்கி லிமிடெட் |
உயர்ந்தபட்ச கடன் வரையறை மற்றும் காலம் | 1 ஆண்டு சலுகைக் காலத்தினை உள்ளடக்கி 5 ஆண்டுகளுக்கு ரூ.25 மில்லியன் |
வட்டி வீதம் | 1 மில்லியனுக்குள் - 4 சதவீதம் 1 மில்லியனுக்கு மேல் - 5 சதவீதம் |
இலக்கிடப்பட்ட குழு | பாற்பண்ணை, வாசனைத்திரவியங்கள், மரக்கறிப் பயிர்ச்செய்கையில் முன்னணி வகிப்போர் |
நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழில்முயற்சித் துறை அபிவிருத்தி மற்றும் தொழில் உருவாக்கத்திற்கான சுவசக்தி – கடன் திட்டம்
*New Loans are not accepted currently.
Company | Contact |
---|---|
நோக்கம் | நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழில்முயற்சித் துறைகளில் வருமான உருவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள புதிய இளம் தொழில்முயற்சியாளர்களுக்கான தொழில் உருவாக்க வாய்ப்புக்களை வழங்கல் |
நிதியிடல் மூலம் | இலங்கை மத்திய வங்கி |
தொழிற்பாட்டுப் பிரதேசம் | நாடு முழுவதும் |
பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்கள் | இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, அட்டன் நஷனல் வங்கி பிஎல்சி, இலங்கை வர்த்தக வங்கி பிஎல்சி, சம்பத் வங்கி பிஎல்சி, சணச அபிவிருத்தி வங்கி லிமிடெட், இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி |
உயர்ந்தபட்ச கடன் வரையறை மற்றும் காலம் | ரூ.450,000 + கொடை (உயர்ந்தபட்சக் கொடைத் தொகை: ரூ.200,000 இற்கு மேல் ரூ.50,000; கடன் தொகை ரூ.200,000 இற்குள் - கடன் தொகையில் 25 சதவீதம்) 1 ஆண்டு சலுகைக் காலம் உட்பட 5 ஆண்டுகள் |
வட்டி வீதம் | 5.5 சதவீதம் |
இலக்கிடப்பட்ட குழு | புதிய இளம் தொழில்முயற்சியாளர்கள் |