தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

 

anura

இலங்கை மத்திய வங்கியின் 2ஆவது பிரதேச அலுவலம், 1982 மார்ச்சு 20 அன்று அநுராதபுரத்தில் அதன் தொழிற்பாடுகளை ஆரம்பித்தது என்பதுடன் அநுராதபுர பிரதேச அலுவலகத்திற்கு அநுராதபுர நிர்வாக மாவட்டமே ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்ட பிரதேசமாக இருந்தது. இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகங்களைத் தாபிப்பதன் முதன்மை குறிக்கோளுடன் இசைந்து செல்லும் விதத்தில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள், அளவீடுகள் மற்றும் கள விஜயங்கள் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதனூடாகவும் பல்வேறு கொடுகடன் தொடர்களை நடைமுறைப்படுத்துவன் மூலமும் அடிமட்ட மக்களிற்கும் வங்கித்தொழில் முறைமைக்கும் இடையிலான இடைவெளியைச் சுருக்கமடையச்செய்வதில் அநுராதபுர பிரதேச அலுவலகம் முனைப்புடன் ஈடுபட்டது.

காலப்போக்கில், அநுராதபுர பிரதேச அலுவகம் மேலும் சில இடங்களிற்கு அதன் தடத்தை பதித்ததுடன் தற்பொழுது அநுராதபுரம், பொலநறுவை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய 04 மாவட்டங்கள் உட்பட வட மத்திய மாகாணத்தையும் வட மேல் மாகாணத்தையும் பிரதேச அலுவலகம் உள்ளடக்குகின்றது.

புவியியல் ரீதியாக செயற்பரப்பை விரிவுபடுத்துகின்ற அதேவேளை, ஏனைய பிரதேசங்களுக்கு மத்தியில் சமநிலையான பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கு உரிய பிரதேசங்களில் உற்பத்தித்திறன்வாய்ந்த துறைகளை அபிவிருத்தி செய்து ஊக்குவித்தல் மீது கவனம்செலுத்துவதற்கு பிரதேச அலுவலகம் அதன் பணிகளை விரிவுபடுத்தியது. இதற்கமைய, பல்வேறு பிரதேசத்திற்குக் குறிப்பான கருத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு மற்றும் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல் முன்னெடுக்கப்பட்டு பல்வேறு கொடுகடன் தொடர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

1990ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கி தொடக்கத்தில் சேவைகளை நீடித்து நாணயத் தொழிற்பாடுகளை ஆரம்பித்தமையால் அநுராதபுர பிரதேச அலுவலகம் தீர்ப்பனவு நிலையத் தொழிற்பாடுகளில் மாத்திரம் ஈடுபட்ட போதிலும், பின்னர் அநுராதபுர பிரதேச அலுவலகமானது ஊழியர் சேமலாப நிதியத் தொழிற்பாடுகள், ஞபாகார்த்தக்குற்றிகளையும் இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளையும் விற்பனை செய்தல் போன்ற ஏனைய வேறு இலங்கை மத்திய வங்கித் தொழிற்பாடுகளில் பிரதேச மட்ட ரீதியாக ஈடுபட்டது. மிகமுக்கியமாக 2008.09.05 அன்று நாணய அரும்பொருட்காட்சிச்சாலையை அநுராதபுர பிரதேச அலுவலகம் தாபித்தது.



எதிர்வரும் நிகழ்வுகள்

இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி (CBSL) என்பது இலங்கையின் நிதித்துறையின் உச்ச நிறுவனமாகும். இது 1950 இல் நாணயச் சட்ட சட்டம் எண் 58 , 1949 (MLA) இன் கீழ் ஒரு அரை தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது, மற்றும் நாணய வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
  •  
  •  
  •  

எங்களை தொடர்பு கொள்ள

 
பிரதேச அபிவிருத்தித் திணைக்களம்
தபால் பெட்டி இல. 590
தபால் பெட்டி இல. 590
இலங்கை