தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

 

இலங்கையில் ஒவ்வொரு தனிப்பட்டவருக்கும் தொழில்முயற்சிக்கும் மிகவும் அணுகத்தக்க, செயல்திறன்வாய்ந்த, வினைத்திறன் மிக்க மற்றும் வசதியான நிதியியல் பணிகளை வசதிப்படுத்துவதன் வாயிலாக நாட்டின் நிதியியல் வசதிக்குட்படுத்தும் தன்மையினை மேம்படுத்தும் முதன்மைக் குறிக்கோளுடன் இலங்கை மத்திய வங்கி 2021 மார்ச்சில் நாட்டின் முதலாவது தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தினைத் தொடங்கியது. தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயமானது 20 இற்கும் மேற்பட்ட முக்கிய நடைமுறைப்படுத்தல் நிறுவனங்களின் கூட்டிணைப்புடன் நடைமுறைப்படுத்தும் கட்டத்தில் தற்போது காணப்படுகின்றது.

தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் நடைமுறைப்படுத்தல், கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் என்பவற்றை மேற்பார்வை செய்வதற்கு தெளிவான ஆளுகைக் கட்டமைப்பொன்று தாபிக்கப்பட்டுள்ளது. நடைமுறைப்படுத்துகின்ற வேறுபட்ட நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பினை உறுதிசெய்வதற்கும் வேறுபட்ட மட்டங்களில் உரிய பொறுப்புக்களை மேற்கொள்வதற்கு ஆளுகை நிறுவனங்களுக்கு ஆதரவளித்து ஒட்டுமொத்த முன்னேற்றத்தினையும் கண்காணித்து மதிப்பிடுவதற்கும் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயச் செயலகம் நிறுவப்பட்டுள்ளது. உரியகால அடிப்படையில் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் குறிக்கோள்களை அடைவதற்கு நடவடிக்கைத் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில், தமது மேற்பார்வையின் கீழ் வருகின்ற காலவரையறை செய்யப்பட்ட நடவடிக்கைகள் அனைத்து பங்குதாரர்களுக்கும் குறித்தொதுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாய நடவடிக்கைத் திட்டமானது உபாயத்தின் நான்கு முக்கிய தூண்கள் முழுவதும் (டிஜிட்டல் நிதி மற்றும் கொடுப்பனவுகள், நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி நிதி, வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் நிதியியல் அறிவினையும் இயலளவினையும் கட்டியெழுப்புதல்) பரந்துள்ள சுமார் 80 பரந்த நடவடிக்கைகளையும் மரபுரீதியாக வேறுபட்டுள்ளவற்றை இணைக்கின்ற ஆக்க உணர்வையும் (தரவுகள், உட்கட்டமைப்பு மற்றும் கொள்கைக் கருவிகள் அத்துடன் இயலச்செய்கின்ற ஒழுங்குமுறைப்படுத்தல் சூழல்) என்பவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

Strategy Framework of NFIS

Governance Structure of NFIS

பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனம் (IFC)

பணி நிகழ்ச்சித் திட்டத்தில் பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனம் - நிதி அலுவல்கள் மற்றும் வர்த்தக, மகளிர் திணைக்களத்தின் கீழ் பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதியியல் உதவியுடன் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயம் இலங்கை மத்திய வங்கியினால் தலைமைவகித்து முன்னெடுக்கப்படுகின்றது. 2018 தொடக்கம் பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனமானது தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் பங்காளராக இருந்து வருகின்றது. 2018இல் பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தின் உதவியுடன் இலங்கை மத்திய வங்கியினால் நடாத்தப்பட்ட நிதியியல் வசதிக்குட்படுத்தல் பற்றிய தேசிய மட்ட அளவீட்டின் மூலம் உபாயத்தின் அடிப்படை உருவாக்கப்பட்டது.

பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனம் பற்றி

உலக வங்கிக் குழுவின் உறுப்பினரான பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனம் வளர்ந்துவரும் சந்தைகளில் தனியார் துறையினை மையப்படுத்திய பாரிய உலகளாவிய அபிவிருத்தி நிறுவனமாகும். அபிவிருத்தியடைந்துவருகின்ற நாடுகளில் சந்தைகளையும் வாய்ப்புக்களையும் உருவாக்குவதற்கான எமது மூலதனத்தையும் நிபுணத்துவத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, 100 இற்கும் அதிகமான நாடுகளில் நாம் பணியாற்றுகின்றோம். உலகளாவியளவில் ஒன்றிணைந்த நெருக்கடிகளின் தாக்கத்தினால் நாடுகள் பற்றிக்கொண்டுள்ளமையினால் கடுமையான வறுமையினை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பகிரப்பட்ட சுபீட்சத்தினைத் தூண்டுவதற்கும் தனியார் துறையின் சக்தியிலிருந்து அநுகூலமடைந்து 2022ஆம் நிதியாண்டில் அபிவிருத்தியடைந்துவருகின்ற நாடுகளில் தனியார் கம்பனிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்களுக்கு ஐ.அ.டொலர் 32.8 பில்லியன் வழங்கியது. மேலதிகத் தகவல்களுக்கு www.ifc.org. இற்குள் பிரவேசிக்கவும்.

எதிர்வரும் நிகழ்வுகள்

இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி (CBSL) என்பது இலங்கையின் நிதித்துறையின் உச்ச நிறுவனமாகும். இது 1950 இல் நாணயச் சட்ட சட்டம் எண் 58 , 1949 (MLA) இன் கீழ் ஒரு அரை தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது, மற்றும் நாணய வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
  •  
  •  
  •  

எங்களை தொடர்பு கொள்ள

 
பிரதேச அபிவிருத்தித் திணைக்களம்
தபால் பெட்டி இல. 590
தபால் பெட்டி இல. 590
இலங்கை