பிரதேச அலுவலகங்களைத் தாபித்தல்
நாணயக் கொள்கை சட்டத்தின் 7ஆம் பிரிவிற்கமைவாக, தேவையேற்படுகின்றவாறு, இலங்கை மத்திய வங்கியானது இலங்கையின் ஏனைய இடங்களில் கிளைகளைக் கொண்டிருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தற்போது மாத்தறை, அநுராதபுரம், மாத்தளை, கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களில் பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் கண்ணோட்டத்தின் கீழ் ஆறு (6) பிரதேச அலுவலகங்கள் காணப்படுகின்றன. இலங்கை மத்திய வங்கியின் முதல் பிரதேச அலுவலகமான மாத்தறை பிரதேச அலுவலகம், 1981 மார்ச்சில் தாபிக்கப்பட்டதுடன் அநுராதபுரம், மாத்தளை, கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் நுவரெலியா ஆகிய ஏனைய பிரதேச அலுவலகங்கள் முறையே 1982, 1985, 2015, 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டன.
பிரதேச அலுவலகங்களின் முக்கிய தொழிற்பாடுகள் பின்வருமாறு
- பிரதேச மட்டத்தில் மத்திய வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தல்
- வங்கித்தொழில் முறைமையினூடாக நிதியளிப்பதற்கான அணுகலை வழங்குவதன் மூலம் பிரதேச பொருளாதாரத்தை முன்னேற்றுதல் மற்றும் ஊக்குவித்தல் அத்துடன் தொடர்புடைய ஏனைய பணிகளுடன் ஒருங்கிணைத்தல்
இதற்கமைய, இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ், இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகங்கள் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளில் பிரதானமாக கவனம்செலுத்துகின்றது. கொடுகடன் முகாம்கள், வங்கித்தொழில் ஆலோசனைகள் மற்றும் கொடுகடன் இணைப்புக்கள் மூலமாக நிதியியல் உதவி வழங்கப்படுகின்ற அதேவேளை முக்கியமாக பின்வரும் துறைகளுக்கு கொடுகடனுடன் இணைந்த பணிகளை வழங்குதல்;
- திறன் விருத்தி மற்றும் தேர்ச்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்
- தொழில்நுட்ப மாற்றல் நிகழ்ச்சித்திட்டங்கள்
- சந்தை இணைப்புக்கள்
- கீழே குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் முக்கிய தொழிற்பாடுகளை பிரதேச மட்டத்தில் நடைமுறைப்படுத்தி ஒருங்கிணைப்பதற்கு ஆதரவளித்தல் ;
- ஊழியர் சேமலாப நிதியத்துடன் தொடர்புடைய விடயங்கள்
- இலங்கை மத்திய வங்கியின் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் ஏனைய தொடர்புடைய அளவீட்டு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய தரவுகள் சேகரிப்பு
- மத்திய வங்கியின் பணிகள் மற்றும் தொழிற்பாடுகள், முறைசார் வங்கித்தொழில், அதிகாரமளிக்கப்பட்ட/உரிமம்பெற்ற நிதியியல் நிறுவனங்களினால் வழங்கப்படும் நிதியியல் பணிகள், மற்றும் அந்நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் கடன் திட்டங்கள் தொடர்பிலும் விழிப்பூட்டல் அமர்வுகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் என்பவற்றை நடாத்துவதன் மூலமாக போலியான நாணயத் தாள்களை இனங்காணுதல் தொடர்பிலும் பிரதேச மட்டத்தில் பொதுமக்கள், சட்ட நடைமுறைப்படுத்தல் முகவராண்மைகள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் விழிப்பூட்டலை மேம்படுத்துவதற்தான வழிமுறைகளை மேற்கொள்ளுதல்.
- மத்திய வங்கியின் வெளியீடுகள், ஞாபகார்த்த நாணயக் குற்றிகள் மற்றும் நாணயத் தாள்களை பிரதேச மட்டத்தில் விற்பனை செய்தல்
- பிரதேச மட்டத்தில் ஆர்வலர்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் கீழ் குறிக்கோள்களை அடைவதற்கு ஆதரவளித்தல்.