இலங்கையில் ஒவ்வொரு தனிப்பட்டவருக்கும் தொழில்முயற்சிக்கும் அதிக பெறுவழி, செயல்திறன்வாய்நத, வினைத்திறன்மிக்க மற்றும் வசதியான நிதியியல் பணிகளை வசதிப்படுத்துவதன் மூலம் நாட்டின் நிதியியல் வசதிக்குட்படுத்தலை மேம்படுத்தும் முதன்மைக் குறிக்கோளுடன் இலங்கை மத்திய வங்கி, 2021 மாச்சில் நாட்டின் முதலாவது தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தினைத் தொடங்கியது. தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயமானது தற்போது 20 இற்கும் மேற்பட்ட முக்கிய நடைமுறைப்படுத்தல் நிறுவனங்களின் கூட்டிணைப்புடன் நடைமுறைப்படுத்தும் கட்டத்திலுள்ளது.
தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் நடைமுறைப்படுத்தல், கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் என்பவற்றை மேற்பார்வைசெய்வதற்கு தெளிவான ஆளுகைக் கட்டமைப்பொன்று தாபிக்கப்பட்டுள்ளது. இதில், வேறுபட்ட நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பினை உறுதிசெய்வதற்கும் வேறுபட்ட மட்டங்களில் தொடர்புடைய பொறுப்புக்களைக் கொண்டு நடாத்துவதற்கு ஆளுகை நிறுவனங்களுக்கான ஒட்டுமொத்த முன்னேற்ற ஆதரவளித்தலை கண்காணிப்பதற்கும் மதிப்பிடுவதற்கும் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயச் செயலகம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் குறிக்கோள்களை உரிய விதத்தில் எய்துவதற்கு நடவடிக்கைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அவற்றின் மேற்பார்வையின் கீழ் வருகின்ற காலவரையறையுடனான நடவடிக்கைகள் அனைத்து ஆர்வலர்களுக்கும் குறித்தொதுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் நடவடிக்கைத் திட்டமானது உபாயத்தின் நான்கு முக்கிய தூண்கள் மீதும் (டிஜிட்டல் நிதி மற்றும் கொடுப்பனவுகள், நடுத்தர சிறிய மற்றும் நுண்பாக தொழில்முயற்சி நிதி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நிதியியல் அறிவும் இயலளவு விருத்தியும்) அவசியமான இயலளச்செய்யும் காரணிகள் (தரவு, உட்கட்டமைப்பு மற்றும் கொள்கைக் கருவிகள் அத்துடன் இயலச்செய்கின்ற ஒழுங்குமுறைப்படுத்தல் சூழல்) என்பன மீது சுமார் 80 பரந்த நடவடிக்கைகள் வியாபித்துள்ளன.