- விவரங்கள்
- எழுத்தாளர்: Procons
- பிரிவு: Uncategorised
- படிப்புகள்: 766
அபிவிருத்தி நிதி முயற்சிகளுடன் தொடர்புடைய கொள்கை உபாயங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் கவனம்செலுத்துகின்றது. வசதிக்குட்படுத்துகின்ற மற்றும் உறுதியான நிதியியல் முறைமையையும் சமநிலையான, சமத்துவமிக்க அத்துடன் நிலைபேறான பொருளாதார வளர்ச்சியினையும் அடைவதற்கு நாட்டில் நிதியியல் வசதிக்குட்படுத்தலை ஊக்குவிப்பது இதன் நோக்கமாகும். இக்குறிக்கோள்களை எய்துவதில் இலங்கை மத்திய வங்கியின் ஆறு பிரதேச அலுவலகங்களும் முதன்மை வகிபாகத்தை ஆற்றுகின்ற அதேவேளை பிரதேச மட்டத்தில் இலங்கை மத்திய வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.