Company | Contact |
நோக்கம் |
வீட்டுத்தோட்டங்களிலிருந்து சுயமாக போதுமானளவு மேற்கொள்ளப்படும் உள்நாட்டு வேளாண்மை உட்பட, குறுங்கால பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள நுண்பாக மற்றும் சிறியளவு வேளாண்மையாளர்களின் தொழிற்படு மூலதனத்திற்கு வசதியளிப்பதுடன் பங்கேற்பாளர்களின் சமூக பொருளாதார நிலைமைகளை உயர்த்துதல். |
நிதியிடல் மூலம் |
இலங்கை அரசாங்கம் - வட்டி உதவுதொகை மற்றும் கொடுகடன் உத்தரவாதம் பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்கள் - கடன் நிதியளித்தல் |
தொழிற்பாட்டுப் பிரதேசம் |
நாடு முழுவதும் |
பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்கள் |
இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி கொமர்~ல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி, கார்கில்ஸ் வங்கி லிமிடெட், டிஎவ்சிசி வங்கி பிஎல்சி, எச்டிஎப்சி பாங்க், அட்டன் நசனல் வங்கி பிஎல்சி, சம்பத் வங்கி பிஎல்சி, சணச அபிவிருத்தி வங்கி லிமிடெட், செலான் வங்கி பிஎல்சி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி, மற்றும் யூனியன் பாங்க் ஒவ் கொழும்பு |
உயர்ந்தபட்ச கடன் வரையறை மற்றும் காலம் |
பயிருக்கு பயிர் மற்றும் 270-365 நாட்கள் வேறுபடும் (உயர்ந்தபட்சம் ரூ.3,000,000) |
வட்டி வீதம் |
8 சதவீதம் |
கொடுகடன் உத்தரவாதம் |
வேண்டுமென்றே செலுத்தத் தவறியவர்களினால் ஏற்படும் இழப்பின் முதல்தொகையில் 60 சதவீதம் |
தகைமையுடைய வகையினர் |
நெல், மிளகாய், வெங்காயம், பருப்பு வகைகள் (கௌபி, பயறு, உழுந்து, சோயா அவரை, குரக்கன், சோளம்”, எண்ணெய் விதைகள் (நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி), வேர் மற்றும் தண்டு (உருளைக்கிழங்கு, வற்றாளைக் கிழங்கு, மரவள்ளி, சேப்பங்கிழங்கு), காய்கறிகள் (கத்தரி, வெண்டி, பீட்ரூட், அவரை, கோவா, கரட், குடைமிளகாய், தக்காளி, லீக்ஸ், முள்ளங்கி. நோகோல், பீர்க்கங்காய், பாகற்காய், பூசணிக்காய்), ஏனையவை (இஞ்சி, கரும்பு, மஞ்சள்) |