- விவரங்கள்
- எழுத்தாளர்: Procons
- பிரிவு: Uncategorised
- படிப்புகள்: 874
- விவரங்கள்
- எழுத்தாளர்: Procons
- பிரிவு: Uncategorised
- படிப்புகள்: 8833
- விவரங்கள்
- எழுத்தாளர்: Procons
- பிரிவு: Uncategorised
- படிப்புகள்: 747
- விவரங்கள்
- எழுத்தாளர்: Procons
- பிரிவு: Uncategorised
- படிப்புகள்: 664
இலங்கையில் ஒவ்வொரு தனிப்பட்டவருக்கும் தொழில்முயற்சிக்கும் மிகவும் அணுகத்தக்க, செயல்திறன்வாய்ந்த, வினைத்திறன் மிக்க மற்றும் வசதியான நிதியியல் பணிகளை வசதிப்படுத்துவதன் வாயிலாக நாட்டின் நிதியியல் வசதிக்குட்படுத்தும் தன்மையினை மேம்படுத்தும் முதன்மைக் குறிக்கோளுடன் இலங்கை மத்திய வங்கி 2021 மாச்சில் நாட்டின் முதலாவது தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தினைத் தொடங்கியது. தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயமானது 20 இற்கும் மேற்பட்ட முக்கிய நடைமுறைப்படுத்தல் நிறுவனங்களின் கூட்டிணைப்புடன் நடைமுறைப்படுத்தும் கட்டத்தில் தற்போது காணப்படுகின்றது.
தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் நடைமுறைப்படுத்தல், கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் என்பவற்றை மேற்பார்வை செய்வதற்கு தெளிவான ஆளுகைக் கட்டமைப்பொன்று தாபிக்கப்பட்டுள்ளது. நடைமுறைப்படுத்துகின்ற வேறுபட்ட நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பினை உறுதிசெய்வதற்கும் வேறுபட்ட மட்டங்களில் உரிய பொறுப்புக்களை மேற்கொள்வதற்கு ஆளுகை நிறுவனங்களுக்கு ஆதரவளித்து ஒட்டுமொத்த முன்னேற்றத்தினையும் கண்காணித்து மதிப்பிடுவதற்கும் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயச் செயலகம் நிறுவப்பட்டுள்ளது. உரியகால அடிப்படையில் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் குறிக்கோள்களை அடைவதற்கு நடவடிக்கைத் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில், தமது மேற்பார்வையின் கீழ் வருகின்ற காலவரையறை செய்யப்பட்ட நடவடிக்கைகள் அனைத்து பங்குதாரர்களுக்கும் குறித்தொதுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாய நடவடிக்கைத் திட்டமானது உபாயத்தின் நான்கு முக்கிய தூண்கள் முழுவதும் (டிஜிட்டல் நிதி மற்றும் கொடுப்பனவுகள், நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி நிதி, வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் நிதியியல் அறிவினையும் இயலளவினையும் கட்டியெழுப்புதல்) பரந்துள்ள சுமார் 80 பரந்த நடவடிக்கைகளையும் மரபுரீதியாக வேறுபட்டுள்ளவற்றை இணைக்கின்ற ஆக்க உணர்வையும் (தரவுகள், உட்கட்டமைப்பு மற்றும் கொள்கைக் கருவிகள் அத்துடன் இயலச்செய்கின்ற ஒழுங்குமுறைப்படுத்தல் சூழல்) என்பவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.