- விவரங்கள்
- எழுத்தாளர்: Procons
- பிரிவு: Uncategorised
- படிப்புகள்: 766
- விவரங்கள்
- எழுத்தாளர்: Procons
- பிரிவு: Uncategorised
- படிப்புகள்: 1228
இலங்கையில் ஒவ்வொரு தனிப்பட்டவருக்கும் தொழில்முயற்சிக்கும் அதிக பெறுவழி, செயல்திறன்வாய்நத, வினைத்திறன்மிக்க மற்றும் வசதியான நிதியியல் பணிகளை வசதிப்படுத்துவதன் மூலம் நாட்டின் நிதியியல் வசதிக்குட்படுத்தலை மேம்படுத்தும் முதன்மைக் குறிக்கோளுடன் இலங்கை மத்திய வங்கி, 2021 மாச்சில் நாட்டின் முதலாவது தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தினைத் தொடங்கியது. தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயமானது தற்போது 20 இற்கும் மேற்பட்ட முக்கிய நடைமுறைப்படுத்தல் நிறுவனங்களின் கூட்டிணைப்புடன் நடைமுறைப்படுத்தும் கட்டத்திலுள்ளது.
தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் நடைமுறைப்படுத்தல், கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் என்பவற்றை மேற்பார்வைசெய்வதற்கு தெளிவான ஆளுகைக் கட்டமைப்பொன்று தாபிக்கப்பட்டுள்ளது. இதில், வேறுபட்ட நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பினை உறுதிசெய்வதற்கும் வேறுபட்ட மட்டங்களில் தொடர்புடைய பொறுப்புக்களைக் கொண்டு நடாத்துவதற்கு ஆளுகை நிறுவனங்களுக்கான ஒட்டுமொத்த முன்னேற்ற ஆதரவளித்தலை கண்காணிப்பதற்கும் மதிப்பிடுவதற்கும் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயச் செயலகம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் குறிக்கோள்களை உரிய விதத்தில் எய்துவதற்கு நடவடிக்கைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அவற்றின் மேற்பார்வையின் கீழ் வருகின்ற காலவரையறையுடனான நடவடிக்கைகள் அனைத்து ஆர்வலர்களுக்கும் குறித்தொதுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் நடவடிக்கைத் திட்டமானது உபாயத்தின் நான்கு முக்கிய தூண்கள் மீதும் (டிஜிட்டல் நிதி மற்றும் கொடுப்பனவுகள், நடுத்தர சிறிய மற்றும் நுண்பாக தொழில்முயற்சி நிதி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நிதியியல் அறிவும் இயலளவு விருத்தியும்) அவசியமான இயலளச்செய்யும் காரணிகள் (தரவு, உட்கட்டமைப்பு மற்றும் கொள்கைக் கருவிகள் அத்துடன் இயலச்செய்கின்ற ஒழுங்குமுறைப்படுத்தல் சூழல்) என்பன மீது சுமார் 80 பரந்த நடவடிக்கைகள் வியாபித்துள்ளன.
- விவரங்கள்
- எழுத்தாளர்: Procons
- பிரிவு: Uncategorised
- படிப்புகள்: 1745
தாபனமும் குறிக்கோள்களும்
நாட்டின் பிராந்திய ஏற்றத்தாழ்வினைக் குறைப்பதற்கு உதவியினை வழங்குகின்ற குறிக்கோளுடன் அபிவிருத்தி நிதித் திணைக்களம் மற்றும் கிராமியக் கொடுகடன் திணைக்களம் என்பவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் இலங்கை மத்திய வங்கியின் மறுசீரமைத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2002ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது. இலங்கையில் நிதியியல் வசதிக்குட்படுத்தலை ஊக்குவிப்பதில் மிகவும் தேவையான கொள்கை முயற்சிகளை அறிமுகப்படுத்தல் மற்றும் நடத்தை சார்ந்த இடைத்தலையீடுகள் என்பவற்றுக்கு ஏனைய ஆர்வலர்களுடனான ஒத்துழைப்புடன் தோள்கொடுத்து, பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் உபாய ரீதியான பங்கினை ஆற்றுகின்றது. நாடு முழுவதும் நிதிக்கான பெறுவழியினை அதிகரித்தல் மற்றும் நிதியியல் அறிவினை மேம்படுத்துதல் என்பன வாயிலாக பல்வேறு பிராந்திய அபிவிருத்திச் செயற்பாடுகளில்ஈடுபடுவதன் மூலம் நாட்டில் சமநிலையான வளர்ச்சியினை அடைவதற்கு பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் ஆதரவளிக்கின்றது
நிதியியல் வசதிக்குட்படுத்தல் குறிக்கோள்களுக்கிசைவாக பிரதேச அலுவலக நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்குடன் 2020ஆம் ஆண்டில், மத்திய வங்கியின் பிராந்தியச் செயற்பாடுகளை, கண்காணித்து ஒருங்கிணைப்பதற்கு பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. பிராந்தியங்களில் பிரதானமாக அபிவிருத்திச் செயற்பாடுகளை ஊக்குவிப்பதனூடாகஇப்பிரதேச அலுவலகங்கள் மத்திய வங்கியின் தொழிற்பாடுகளை விரிவுபடுத்துகின்றன. மாத்தறை, அநுராதபுரம், மாத்தளை, திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் நுவரேலியா ஆகிய இடங்களில் தாபிக்கப்பட்டுள்ள ஆறு பிரதேச அலுவலகங்கள் ஊடாக தற்போது பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் சென்றடைவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் தொழிற்பாடுகள்
பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் மரபு ரீதியான தொழிற்பாடுகள், இலங்கை அரசாங்கத்தின் (அரசாங்கம்) முகவராக பங்கேற்கின்ற நிதியியல் நிறுவனங்களூடாக சலுகை வட்டி வீதங்களில் கொடுகடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை உள்ளடக்கிய மரபுசார் கொடுகடன் தொழிற்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாக பிராந்திய வளர்ச்சியினை எய்துவதை அதிகம் மையப்படுத்தியிருந்தது.
கடந்த சில ஆண்டுகளாக, பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் நோக்கொல்லையும் தொழிற்பாடுகளும் முக்கிய உபாய மாற்றமொன்றை எதிர்கொண்டன. இதில், நவீன உலகளாவிய போக்குகளுக்கிசைவாக பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் வசதிக்குட்படுத்துகின்ற மற்றும் உறுதியான நிதியியல் முறைமை மற்றும் சமநிலையான, சமத்துவமான பொருளாதார வளர்ச்சி என்பவற்றை அடைந்துகொள்வதற்கு ஆதரவளிப்பதற்கு இலங்கையின் நிதியியல் வசதிக்குட்படுத்தலை ஊக்குவிப்பதற்கு அதன் மையப்படுத்தலை தரமுயர்த்தியது.
தொழிற்பாடுகளின் வகை
நிதியியல் வசதிக்குட்படுத்தல்
தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் மற்றும் முன்னேற்றத்தினை ஒருங்கிணைத்தல், கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல்.
நிதிக்கான பெறுவழி
வசதியான வட்டி வீதங்களில் கொடுகடன் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் தேவையுடைய துறைகளை இலக்காகக் கொண்டு கொடுகடன் துணைச் சேவைகளை வழங்குதல்.
நிதியியல் அறிவு
சமூகத்தில் நிதியியல் வசதிக்குட்படுத்தலை ஊக்குவிப்பதற்கு நிதியியல் அறிவு மற்றும் இயலளவைக் கட்டியெழுப்புதல் நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்.
பிரதேச அலுவலக முகாமைத்துவம்
பிரதேச அலுவலகங்களின் செயற்பாடுகளை வசதிப்படுத்தல், கண்காணித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்
சர்வதேச ரீதியான இணைவுகள்
அயல்நாடுகளுடன் அறிவினை மேம்படுத்துதல் மற்றும் பகிர்ந்துகொள்ளுதலை இலக்காகக் கொண்டு நிதியியல் வசதிக்குட்படுத்தலுக்கான கட்டமைப்பு, ஆசிய கொடுகடன் துணைநிரப்பு நிறுவனக் கட்டமைப்பு, ஆசிய பசுபிக் கிராமிய மற்றும் வேளாண்மை கொடுகடன் அமைப்பு போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒத்துழைத்தல்.